'யானைக்கும் அடி சறுக்கும்' - அதுபோல் பெரிய கவிஞர்களுக்கும் அடி சறுக்கும் போல. மிக நீண்ட நாட்களகவே என் மனதை வாட்டும் ஒரு விஷயம் இது. மற்றபடி இந்த வரிகளை எழுதிய கவிஞர் மீதோ அவர் எழுதிய மற்ற பாடல்கள் மீதோ எனக்கு தனிப்பட்ட விரோதம் இல்லை.
'புல்லு கொடுத்தா பாலு கொடுக்கும் உன்னாலே முடியாது தம்பி' - அண்ணமலை திரைப்படத்தில் வரும் இந்த வரிகளை முதன் முதலில் கேட்டதில் இருந்தே ஏனோ எனக்கு இந்த வரிகளுடன் உடன்பாடு இல்லை. கவிஞரின் நோக்கம் என்னவோ பசு மாட்டை பெருமை படுத்துவதக பாடல் அமைக்க வேண்டும் என்பது தான், ஆனால் எழுதி முடித்ததென்னவோ வேறுவிதமாக அமைந்தது.
மாட்டிற்கு புல் என்பதும், மனிதனுக்கு உணவு என்பதும் இயற்கையின் அமைப்பு. மாடு சாப்பிடுகிறதே என்று மனிதன் புல்லை தின்ன முடியுமா? முடிந்தால் மனிதனால் பால் தான் கொடுக்க முடியுமா? இந்த பாடல் மூலம் இவர் என்ன சொல்ல வருகிறார் என்றே எனக்கு புரியவில்லை.
ஒவ்வொரு ஜீவராசிகளுக்கும் ஒவ்வொரு குணங்கள் உண்டு. மாட்டிற்கு இருப்பது மனிதனிடம் இருக்காது, மனிதனிடம் இருப்பது கழுதையிடம் இருக்காது என்று மெத்தப்படித்தவருக்கு நான் சொல்ல முடியுமா? நான் என் மனசாட்சியோடு தானே பேசுகிறேன்... சரி பாடல் வந்து இவ்வளவு வருடங்கள் ஆகிவிட்டது விட்டுத்தள்ளுங்கள்.
No comments:
Post a Comment